கோவை-திருச்சி சாலையில் மரம் விழுந்து விபத்து

கோவை,பிப்.20: கோவை-திருச்சி சாலையில் ரெயின்போ பேருந்து நிறுத்தம் அருகே 40 ஆண்டுகள் பழமையான சவுண்டால் மரம் இருந்தது. நேற்று காலை 11 மணியளவில் அந்த மரம் உடைந்து திருச்சி சாலையில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டிகள் யாருக்கு காயம் ஏற்படவில்லை.மரம் விழுந்தது தொடர்பாக அப்பகுதிமக்கள் தீயணைப்புத்துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அப்பகுதிக்கு வந்த தீயணைப்புத்துறையினர் சாலையில் விழுந்துகிடந்த ராட்சத மரத்தை அறுவை இயந்திரம் கொண்டு கிளைகளை வெட்டி அகற்றினர்.

இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertising
Advertising

Related Stories: