×

ரூ.6 ஆயிரம் பெறும் விவசாயிகள் பட்டியல் கணக்கெடுப்பு இன்றுடன் நிறைவு

உடுமலை, பிப். 20: பிரதமர் அறிவித்துள்ள ஏழை விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் கணக்கெடுப்பு பணி இன்றுடன் நிறைவடைகிறது.பிரதமர் கிசான் சம்மன் நிதித்திட்டத்தின்கீழ், ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் 3 தவணைகளில் வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, உடுமலை வட்டாரத்தில் அதற்கு தகுதியுள்ள விவசாயிகளை கணக்கெடுக்கும் பணியில் வேளாண் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.இத்திட்டத்தின் கீழ், 2 ஹெக்டேர் பயிர் செய்யக்கூடிய நிலம் வைத்திருக்கும் கணவன், மனைவி, மைனர் வாரிசு பயன்பெறலாம். மார்ச் 31ம் தேதிக்குள் முதல் தவணை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.விவசாய நிலத்தின் பத்திர நகல், வில்லங்க சான்று நகல், பட்டா, சிட்டா நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு விவரம், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை அளிக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள ஒரு விவசாயிக்கு மட்டுமே பலன் பெற முடியும்.இந்த கணக்கெடுப்பு பணி இன்றுடன் (20ம்தேதி) நிறைவடைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி