4ஜி அலைக்கற்றை ஒதுக்ககோரி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, பிப்.20: பிஎஸ்என்எல்க்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யகோரி தஞ்சை மேரீஸ் கார்னர் அருகே பிஎஸ்என்எல் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிஎஸ்என்எல்க்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு விதிகளின்படி மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும். பிஎஸ்என்எல் உருவாக்கும்முன் மத்திய அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி பிஎஸ்என்எல்க்கு அதன் சொத்துக்களை மாற்றி கொடுக்கும் செயலை விரைவுப்படுத்தி முடித்து கொடுக்க வேண்டும். பிஎஸ்என்எல் மொபைல் டவர்களை செயல்படுத்தவும், பராமரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள அவுட்சோர்சிங் முறையை கைவிடவேண்டும்.
Advertising
Advertising

2007ம் ஆண்டு முதல் பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் பிஎஸ்என்எல் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த வேலைநிறுத்த போராட்டம் இன்று (20ம் தேதி) வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இதன்படி நேற்று 2வது நாளாக தஞ்சை மேரீஸ்கார்னர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் பிஎஸ்என்எல் பிஎஸ்என்எல் அனைத்து அதரிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் உதயன், பொருளாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தனர்.இதில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

Related Stories: