விவசாயி வீட்டில் ரூ.1.70 லட்சம் கொள்ளை

தஞ்சை, பிப். 20: அம்மாபேட்டை அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.70 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்ைச மாவட்டம் அம்மாபேட்டை அருகே கீழவஸ்தாச்சாவடி கொள்ளுபேட்டை தெருவை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் (47). இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு தனது சகோதரர் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். மீண்டும்17ம் தேதி இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மற்றும் 6 கிராம் தங்க தோடு ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடு திருட்டுக்கு பயன்படுத் திய கார் பறிமுதல்:  பூதலூர் அருகே ஆடு திருட்டுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒருவரை கைது செய்து மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்காட்டுப்பள்ளி அருகே தொண்டராயாரன்பாடி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (48). இவரது வீட்டில் 5 ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 14ம் தேதி இரவு வழக்கம்போல ஆடுகளை கட்டி போட்டு விட்டு வீட்டில் உறங்கினார். மறுநாள் காலையில் வந்தபோது ஒரு ஆட்டை காணவில்லை. இதுகுறித்து பூதலூர் போலீசில் முருகானந்தம் புகார் செய்தார். இந்நிலையில் சப்இன்ஸ்பெக்டர் சாவித்ரி மற்றும் போலீசார், ஆவாரம்பட்டி பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்தனர். அப்போது காரில் வந்த 4 பேரில் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து பிடிபட்ட ராயந்தூர் தெற்கு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (17) என்பவரை பிடித்து விசாரித்தபோது செலவுக்கு பணம் இல்லையென்பதால் ஆட்டை திருடி விற்பனை செய்ய சென்றதாகவும், தப்பி சென்றவர்கள் ராயந்தூர் தெற்கு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த ரவுடி குட்டி(எ) அதியமான், அன்புராஜ் மகன் பிரவின், குணமங்கலம் ராஜேந்திரன் மகன் தக்காளி (எ) சஞ்சீவி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிந்து காரை பறிமுதல் செய்ததுடன், ராஜ்குமாரை கைது செய்து தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: