ஒரத்தநாடு அருகே ஓராண்டாக சீரமைக்கப்படாத குடிநீர் தொட்டி பழுது பொதுமக்கள் அவதி

ஒரத்தநாடு, பிப். 20: ஒரத்தநாடு அருகே குடிநீர் தொட்டி பழுதடைந்து ஓராண்டாகியும் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஒரத்தநாடு அருகே உள்ள  நம்பிவயல் கிராமத்தில் சிவக்கொல்லை தெரு உள்ளது. இந்த பகுதியில் 68  குடும்பங்கள் வசித்து வருகிறது. கடந்த ஓராண்டாக இந்த பகுதியில் குடிநீர்  தொட்டி பழுதாகி சேதமடைந்து கிடக்கிறது. இதனால் ஓராண்டாக குடிநீர் விநியோகம்  செய்யாதால் பொதுமக்கள் தினம்தோறும் சிரமப்பட்டு வருகின்றனர்.
Advertising
Advertising

இதுகுறித்து  அப்பகுதியை சேர்ந்த தவச்செல்வம் கூறியதாவது: சிவக்கொல்லை தெருவில் கடந்த  ஓராண்டாக குடிநீர் தொட்டி சேதமடைந்து கிடக்கிறது.

இதனால் இப்பகுதி  மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யவில்லை. கடந்த ஓராண்டாக பல கிலோ  மீட்டர் தூரம் பயணித்து குடிநீர் கொண்டு வந்து பொதுமக்கள் பயன்படுத்தி  வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பவ இடத்தை பார்வையிட்டு  பழுதடைந்து கிடக்கும் குடிநீர் தொட்டியை சீரமைத்து குடிநீர் வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: