கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் மாசிமக தேரோட்டம்

கும்பகோணம், பிப். 20: கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் மாசிமக விழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோயிலில் மாசி மகவிழா கொடியேற்றம் கடந்த 11ம் தேதி நடந்தது. இந்நிலையில் மாசிமக விழா தேரோட்டம் நேற்று நடந்தது. சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் சக்கரபாணிசுவாமி எழுந்தருளினார். பின்னர் வடம் பிடித்து பக்தர்கள் தேர் இழுத்தனர். தேரில் 108 அதிமங்கள பொருட்களான வெட்டிவேர், சோற்றுக்கற்றாலை, விலாமிச்சை வேர், வெள்ளெருக்கு, ஏலக்காய், ஜாதிக்காய் போன்ற வாசனை மருத்துவ வஸ்துக்கள், விருட்சி, தாமரை, மந்தாரை, சங்குப்பூ, பாரிஜாதம் உள்ளிட்ட புஷ்பங்கள், எழுமிச்சை, கொய்யா, பலா உள்ளிட்ட பழவகைகள் மற்றும் கூந்தப்பனை, ஈச்சங்குலை, மாவிலை தோரணம், வாழை, துளசி, அருகம்புல், தர்ப்பை, வில்வம், அத்தி போன்ற இலை வகைகள் என மொத்தம் 108 வகையான திவ்யமங்கள பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
செய்தனர்.

Related Stories: