×

காரமடை தேர்த்திருவிழா அன்னதான பகுதிகளில் உணவுத்துறையினர் ஆய்வு

கோவை, பிப். 20: காரமடை தேர் திருவிழாவை முன்னிட்டு உணவுத்துறை அதிகாரிகள் அன்னதான குழுக்கள், நீர் மோர் பந்தல்களில் நேற்று ஆய்வு நடத்தினர்.  காரமடை ரங்கநாதர் சுவாமி ேகாயில் மாசி மகத் தேர் திருவிழா நேற்று நடந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து காரமடை தேர்த்திருவிழாவிற்கு பக்தர்கள் சென்று வர 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.  இந்நிலையில், தேர்த்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை உத்தரவின் பேரில் உணவுத்துறையினர் அப்பகுதியில் உள்ள சாலையோர கடைகள், உணவகங்கள், அன்னதான குழுக்கள், நீர் மோர் பந்தல் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினர்.
அதிகாரிகள் மொத்தம் 32 கடைகள், 13 அன்னதான குழுக்களில் சோதனை நடத்தினர். தரமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றதா என்பது தொடர்பாகவும் ஆய்வு செய்தனர். பின்னர், அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளும் வழங்கப்பட்டது.   ஆய்வின் போது உணவு பதிவு சான்று பெறதாவர்களை கண்டறிந்து, பதிவு சான்றிதழை உடனடியாக பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்தார். 

Tags : researchers ,areas ,Karamadai Thirittarivilu Food ,Annadana ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர் களம் அமைக்க கோரிக்கை