×

கிராம ஊராட்சிகளுக்கு நிதி இல்லாததால் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை அதிகாரிகள் புலம்பல்

புதுக்கோட்டை,பிப்.20: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதியில்லாததால் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குற்றசாட்டுகின்றனர்.   
புதுக்கோட்டை மாவட்டத்தில் குன்றண்டார்கோவில், அறந்தாங்கி, திருவரங் குளம், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, மனமேல்குடி, ஆவுடையார்கோவில், திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், விராலிமலை, புதுக்கோட்டை, அரிமளம் ஆகிய 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இந்த ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் மாவட்டம் முழுவதும் 497 கிராம பஞ்சாய த்துகள் உள்ளது. இந்த பஞ்சாயத்துகளின் குடிநீர், குப்பை அகற்றுதல், வீட்டு வரி வசூல் செய்வது உள்ளிட்ட அடிப்டை பணிகளை ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் செய்யப்படுகிறது.
இந்த பணிகளை கவனிக்க குறைந்த அளவு ஊதியத்தில் ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக குடிநீர் தொட்டியை பராமரித்தல், போர் வெல் மோட்டார்களை பாதுகாத்தல் கிராம சாலைகளை மேம்படுத்துதல் உள்ளி ட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.
இந்த பணிகளை செய்ய போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் மாதம் வெறும் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் மட்டுமே ஒதுக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த நிதியை வைத்துக் கொண்டு பஞ்சாயத்திற்கு உள்ள மோட் டார்கள், அலுவலகம் உள்ளிட்டவைகளுக்கு மின் கட்டணம் செலுத்த மட்டுமே உபயோகப்படும்.
குறிப்பாக ஒரு மோட்டார் பழுதானால் ரூ.5ஆயிரத்திற்கு மேல் செலாவகிவிடும். இதபோல 2 மோட்டார் பலுதான்ல ரூ.10ஆயிரம் செலவாகிவிடும். அப்போது அன்றாட பணிகளை மேற்கொள்ள வேண்டிய செலவுக்கு பணம் இல்லாமல் போகிவிடுகிறது. இதனால் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கேட்கும் ஞாயமான கோரிக்கைகளை கூட செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பஞ்சாயத்தை நிர்வாகிக்கும் செயலாளர்கள், ஒன்றிய அலுவலர்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இதனால் போதிய நிதியை ஒதுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றுவோர்கள் கூறியதாவது: கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பஞ்சாயத்திற்கு மாதம் மாதம் சுமார் ரூ. லட்சம் வரை நிதி ஒதுக்கப்பட்டது. இதனால் அனைத்து அடிப்படை வசதி களையும் விரைந்து பொதுமக்களுக்கு செய்து கொடுக்க முடிந்தது. ஆனால் தற்போது ரூ.25ஆயிரம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது.
இதனால் செலவுகளை மட்டுமே சமாளிக்க முடிகிறது. சில நேரங்களில் அதை கூட சமாளிக்க முடிய வில்லை. இதனால் அனைத்து கிராமங்களிலும் மக்கள் அதிகாரிகள் மீது கோபப் படுகின்றனர். அது செய்து தரவில்லை. இது செய்து தரவில்லை என்று குற்சாட்டுகின்றனர். நாங்கள் என்ன செய்முடியும்.
நிதி இருந்தால் கண்டிப்பாக கோரிக்கையை நிறைவேற்ற முடியும்.மாறாக எங்கள் கைகாசையா போட்டு செலவு செய்ய முடியும். இதனால் நாங்கள் மிகுந்த சிரமத் துடன் பணியாற்றி வருகிறோம். இதனால் ஊராட்சிக்கு தேவையான நிதியை விரைந்து அதிகமாக ஒதுக்க வேண்டும் என்றனர்.

Tags : village panchayats ,facilities ,
× RELATED நீர் நிலைகளில் போதிய தண்ணீர் இல்லை...