×

அறந்தாங்கியில் 8 மாதமாக மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடம் காலி வாகனங்கள் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி

அறந்தாங்கி,பிப்.20: அறந்தாங்கியில் கடந்த 8 மாதமாக மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளதால் வாகனங்களை பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளவர்கள் தாங்கள் வாங்கும் வாகனங்களை பதிவு செய்யவும், வாகன ஓட்டுனர் உரிமம் பெறவும், வாகனங்களின் தகுதி சான்று புதுப்பிக்கவும் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கே செல்ல வேண்டிய நிலை இருந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த பணிகளை மேற்கொள்ள புதுக்கோட்டைக்கு சென்று வர அதிக பொருட் செலவும், நேர விரயமும் ஏற்பட்டது. பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்த கடந்த திமுக ஆட்சியில், அறந்தாங்கி தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருந்த உதயம்சண்முகம் முயற்சியால், அப்போ தைய போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு அறந்தாங்கியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அறந்தாங்கியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறக்கப்பட்ட பின் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் வாகனங்களை எளிதாக பதிவு செய்ய முடிந்தது. மேலும் அறந்தாங்கியில் அலுவ லகம் இருந்ததால், ஆயிரக்கணக்கானவர்கள் இருசக்கர, 4 சக்கர வாகன உரிமங் களை பெற்றனர். அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் தற்போது மாதத் திற்கு குறைந்தது 800 வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது. அதே போல நுாற்றுக் கணக்கானவர்கள் ஓட்டுனர், பழுகுநர் உரிமம் பெறவும் வருகின்றனர். புதுக் கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அடுத்த படியாக அதிகம் பேர் பல்வேறு பணிகளுக்காக அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த அனிதா, பணிமாறுதலாகி சென்றபின்னர் சுந்தரராமன் என்பவர் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றினார். பின்னர் அவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பணி மாறுதலில் சென்றுவிட்டார்.

அதன்பிறகு அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்தை நிரப் பாமல், இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அசோக்குமார் கூடுதல் பொறுப்பாக கடந்த 8 மாதங்களாக அறந் தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் பணியையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இதற்காக அவர; அறந்தாங்கிக்கு வாரத்திற்கு இருமுறை மட்டுமே வந்து செல் கிறார். இதனால் அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக த்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் வரும் நாட்களில் ஏராளமானவர்கள் வருவதால், அலுவலகத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகன பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை பொது மக்களுக்கு வழங்க காலதாமதம் ஆகிறது. மேலும் ஒருசிலரது பதிவு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களும் காணாமல் போய்விடும் அவலநிலை உள்ளது.போக்குவரத்து துறைக்கு அதிக வருவாய் தரும் அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு நிரந்தமாக மோட்டார் வாகன ஆய்வாளைர நியமிக்க போக்குவரத்து துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளராக நியமிக்கப்பட்ட பெண் அதிகாரியும், பணியில் சேராமல் விடுப்பில் சென்று விட்டதாக தெரிகிறது.இதுகுறித்து அறந்தாங்கியை சேர்ந்த வாகன ஓட்டுனர்கள் கூறியது:

அறந்தாங்கியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறக்கப்பட்ட பிறகு, வாகனங்களை வாங்குவோருக்கும், ஓட்டுனர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலும் அலுவலகம் அருகே இருப்பதால் , ஆயிரக்கணக்கானவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற்று வாகனம் ஓட்டுவதால் விபத்துக்களும் பெருமளவில் குறைந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலில் திறக்கப்பட்ட அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், கடந்த 8 மாதமாக மோட்டார் வாகன ஆய்வாளர் நியமிக்கப்படாமல், வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே பொறு ப்பு அதிகாரி வருகிறார். இதனால் பொதுமக்களுக்கும், எங்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதனால் வாகன பதிவு சான்று, பழகுனர், ஓட்டுனர் உரிமம் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது என்றனர்.

காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு
தமிழகஅரசுக்கு டாஸ்மாக்கை அடுத்து அதிக வருவாய் தருவது வட்டார போக்கு வரத்து அலுவலகம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் தான். அறந்தாங்கியில் அதிக வருவாய் தரும் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிட த்தை நிரப்பாமல், போக்குவரத்துதுறை வேண்டும் என்றே காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசும், போக்குவரத்துதுறையும் உடன டியாக அறந்தாங்கிக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என பொதுமக்களும், டிரைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : motor vehicle inspector ,
× RELATED விதிமீறி இயக்கப்பட்ட 6 வாகனங்கள் பறிமுதல்