பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் 2வது நாள் ஸ்டிரைக்

கோவை, பிப்.20: கோவை மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று முன் தினம் 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர். 4ஜி சேவையை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு வழங்கவேண்டும். நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என வலியுறுத்தி போராட்ட அறிவிப்பை வெளியிட்டனர்.  ஊழியர்களின் ேகாரிக்கை ஏற்கப்படாத நிலையில் நேற்று இரணடாவது நாளாக சங்கத்தினர் அலுவலக பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அளவில், 145 பி.எஸ்.என்.எல் அலுவலகங்கள் நேற்றும் மூடப்பட்டிருந்தது.  மாவட்ட அளவில் சுமார் 1300 பேர் பணியில் ஈடுபடவில்லை.  பி.எஸ்.என்.எல் சேவை பல இடங்களில் முடங்கியது. குறிப்பாக அரசு அலுவலகங்கள், இ சேவை மையங்கள் போன்றவற்றில் பி.எஸ்.என்.எல் சேவை இருக்கிறது. அலுவலகங்கள் முடங்கியதால், பராமரிப்பு, பழுது பார்ப்பு பணிகள் எங்கேயும் நடக்கவில்லை. நெட்வொர்க் பாதிப்புகள் தொடர்பான புகார்கள் ஏற்கப்படவில்லை. மொபைல், தரைவழி போன் சேவை தொடர்பாக பொதுமக்கள் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை அணுக முடியாமல் தவித்தனர்.  இன்று வரை ஊழியர்கள் போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: