தாய் சேய் நல ஊர்தி டிரைவருக்கு புது சீருடை

கோவை, பிப். 20: தாய்சேய் நல ஊர்தி, அமரர் ஊர்தி வாகன டிரைவர்களுக்கு புதிய சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறந்த பிறகு, தாய்மார்களையும், சேய்களையும் மருத்துவமனைகளில் இருந்து பாதுகாப்பாக அவர்களின் வீடுகளுக்கு கொண்டு செல்லவும், உடல் நலம் பாதித்த பெண்கள், குழந்தைகளை அழைத்து செல்ல ‘102’ என்ற தாய்சேய் நல வாகன திட்டம் கடந்த 2013ல் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தற்போது மொத்தம் 161 வாகனங்கள் உள்ளன. தற்போது வரை 3 லட்சத்து 95 ஆயிரம் பேர் பயடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த வாகனத்தை ஓட்டும் டிரைவர்களுக்கு தற்போது பிங்க் நிறம் கொண்ட புதிய சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போல், அமரர் ஊர்தி வாகனம் ஓட்டும் நபர்களுக்கும் கோட் வடிவிலான புதிய சீருடை வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் தற்போது மொத்தம் ஐந்து தாய்சேய் ஊர்திகளும், 11 அமரர் ஊர்தி வாகனங்களும் உள்ளன. இதில், பணியாற்றும் டிரைவர்கள் அனைவருக்கும் இன்று புதிய சீருடை வழங்கப்படுகிறது.

Advertising
Advertising

Related Stories: