புதர் மண்டிக்கிடக்கும் டைடல் பார்க் சாலை

கோவை  பிப், 20; கோவை அவிநாசி சாலையில் உள்ள டைடல்பார்க் சாலையில் காய்ந்த புதர்கள் அதிக அளவில் உள்ளதால் அப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.  கோவை ஹோப் காலேஜ் பகுதியில் இருந்து தண்ணீர் பந்தல் செல்லும் சாலையில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுவருவதால் பல மாதங்களுக்கு முன் அச்சாலை மாநகராட்சியால் அடைக்கப்பட்டது.

இதனால் டைடல் பார்க் சாலையை பொதுமக்கள் உபயோகித்து வருகின்றனர். தண்ணீர் பந்தல் சாலையில் ரயில்வே கேட் இருப்பதினால், இரு சக்கரவாகன ஓட்டிகள் மற்றும் கார்கள் கடந்த 10 வருடங்களுக்கு மேல் டைட்ல் பார்க் சாலையை உபயோகித்து வருகின்றனர்.

தற்போது இந்த டைடல்பார்க் சாலை சரியாக பராமரிக்காமல் புதர்மண்டியும், குப்பைகள் கொட்டப்பட்டும் கிடக்கிறது. பல மாதங்களாகவே மாநகராட்சி இச்சாலையை சுத்தம் செய்வதில்லை. சென்டர்மீடியன் மற்றும் சாலை ஓரத்தில் புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. வெயிலின் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக புதர்கள் காய்ந்து காணப்படுகிறது. இதனால் எந்நேரத்திலும் தீப்பிடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் சிலர் இச் சாலையில் மது பாட்டில்களை எறிந்துவிட்டு செல்கின்றனர். நடைபாதையில் ஆங்காங்கே கேபிள்களுக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என அப்பகுதியினர் கூறுகின்றனர்.

Related Stories: