×

கோவை மின் வாரியத்தில் ஐ.டி.ஐ தொழிற்பழகுநர் பயிற்சிக்கு நேர்காணல்

கோவை, பிப். 20: தமிழ்நாடு மின்சார வாரியத்தின், கோவை மின் பகிர்மான வடக்கு வட்டத்தில் ஐ.டி.ஐ கல்வி பயின்றவர்களுக்கான, தொழிற்பழகுநர் பயிற்சிக்கான நேர்கானல் நேற்று கோவை டாடாபாத் பகுதியில் அமைந்துள்ள மின்பகிர்மான வடக்கு மேற்பார்வை அலுவலகத்தில் தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நேர்காணல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. கோவை மின் பகிர்மான வடக்கு வட்டத்திற்குட்பட்ட அலுவலகங்களில் 2018-2019 ஆம் ஆண்டிற்கான ஒருவருட கால ஐ.டி.ஐ தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 49 வயர்மேன் மற்றும் எலக்ட்ரீஷியன்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ 7500 ஊக்க தொகை வழங்கப்படும்.
இந்த நேர்காணல் நடத்துவதற்காக, கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட திறன்மேம்பாட்டு மையம் ஆகிய அலுவலகத்திலிருந்து 290 ஐ.டி.ஐ கல்வி பெயர்ப் பட்டியல் பெறப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேற்று அதில் 150 பேர் இந்த நேர்காணலில் கலந்து கொண்டனர்.நேர்காணலில் கலந்து கொள்ள வருபவர்கள் கல்வி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அட்டை கொண்டுவர வேண்டும். அதே சமயம் ஏற்கணவே இந்த பயிற்சி பெற்றவர்கள் மீண்டும் இந்த நேர்காணலுக்கு வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags : professional ,ITI ,Coimbatore Power Board ,
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...