கோவை ரயில் நிலையத்தில் தரமற்ற குடிநீர்: பயணிகள் அதிருப்தி

கோவை, பிப்.20: ேகாவை ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தரமில்லாத குடிநீரால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.  கோவை ரயில் நிலையத்தில், 6 பிளாட்பாரத்தில் 29 இடத்தில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்களில் சிறுவாணி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குழாய் மூலமாக வழங்க வாய்ப்பு இருந்தும், போர்வெல் தண்ணீரை கலந்து சப்ளை செய்வது வழக்கமாக நடக்கிறது. உப்புகரிக்கும் இந்த தண்ணீரை ரயில் பயணிகள் குடிக்க முடியாமல் தவிக்கின்றனர். ரயில் நிலையத்திற்கு தினமும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கிறது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பிளாட்பாரத்தில் உள்ள குழாய்களில் இருந்து குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.  இதில் தரம் குறைந்த போர்வெல் தண்ணீரை கலப்பதால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர். பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் பிளாட்பாரம், ரயில்பாதை சுத்தம் செய்யும் தண்ணீரை குடிநீர் தொட்டிக்கு சப்ளை செய்வதாக கூறப்படு

கிறது. ேகாவை சேலம் பாசஞ்சர், திருச்சி பாசஞ்சர், பாலக்காடு, மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில்களில் தண்ணீர் வருவது அரிதாகவே இருக்கிறது.

கோவை ரயில் நிலையத்தில் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால், ரயில் பெட்டிகளில் கழிவறைக்கான தொட்டிகளில் நீர் நிரப்புவதில்லை. சில நேரங்களில் ஈரோடு ரயில் நிலையத்தில் நீர் நிரப்பி வைக்கப்படுகிறது.  தண்ணீர் பிரச்னையை சரி செய்ய பயணிகள் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Related Stories: