திமுக செயற்குழு கூட்டம்

ஈரோடு, பிப். 20: ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.  கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் குமார்முருகேஷ் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி, துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானங்களை விளக்கி பேசினர். கருணாநிதியின் திருவுருவ சிலையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைத்த பின்பு மாவட்ட அளவில் முதல் சிலையாக ஈரோட்டில் அமைக்க அனுமதி வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளான மார்ச் 1ம் தேதி இளைஞர் எழுச்சி நாளாக தெற்கு மாவட்டம் முழுவதும் கழக கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். ஈரோடு தெற்கு மாவட்டத்தில் 117 ஊராட்சிகளிலும் ஊராட்சி சபை கூட்டத்தை சிறப்பாக நடத்திய அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஈரோடு தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட 4 தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் தனித்தனியாக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், காஷ்மீரில் தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம் மவுனஅஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கழக கொள்கைபரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமார், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மாவட்ட துணை செயலாளர் சின்னையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: