புழுதி பறக்கும் ஈரோடு காந்திஜி ரோடு

ஈரோடு, பிப்.20: ஈரோடு காந்திஜிரோட்டில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலை சீரமைக்காததால் சாலை முழுவதும் புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது. இங்கு புதிதாக தார்ச்சாலை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாநகராட்சி சார்பில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் பாதாள மின்கேபிள் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஆங்காங்கே சாலை தோண்டப்பட்டு பணிகள்  முடிந்த நிலையில் புதிய தார்ச்சாலை அமைக்கவில்லை. இதனால், அந்த பகுதி முழுவதும் புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது. இதுதவிர, ஈரோடு மாநகரின் முக்கிய பகுதியான பன்னீர்செல்வம் பார்க் காந்திஜி ரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டு மூடப்பட்ட நிலையில் சாலை முழுவதும் புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து காந்திஜிரோடு வழியாக ரயில் நிலையம், சூரம்பட்டி நால்ரோடு, சென்னிமலை, மொடக்குறிச்சி, முத்தூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் பஸ்கள் செல்கின்றன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் இந்த சாலையில் செல்ல தடுமாறுகின்றனர்.

பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து காந்திஜிரோடு செல்லும் சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertising
Advertising

Related Stories: