விளைநிலங்களில் பயிர்களை நாசப்படுத்தும் மயில்கள்

ஈரோடு, பிப். 20:  ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பாசன வாய்க்கால்களில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், விவசாயிகள் முதல் போக நெல் அறுவடையை முடித்து, தற்போது 2ம் போகத்திற்கு நெல் சாகுபடி செய்துள்ளனர். இதில், ஈரோடு கருங்கல்பாளையம், வைரபாளையம், கொடுமுடி, சவாடிபாளையம், கோபி, உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பல ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், விளை நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் புழு, பூச்சிகளை மயில்கள் தோண்டி எடுத்து சாப்பிடுவதால், பயிர்கள் நாசமாகின்றன.விவசாயிகள் கூறுகையில்,`மயில்கள் கூட்டம் கூட்டமாக வந்து விளை நிலங்களில் பூச்சி, புழுக்களை தோண்டி எடுத்து சாப்பிட்டு செல்கின்றன. இதனால் நெல் பயிர்கள் அதிகளவில் நாசமாகி வருகிறது. இதனால் நெல் விளைச்சல் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, வனத்துறையினர் மயில்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: