குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.6 ஆயிரமாக உயர்த்த வலியுறுத்தல்

ஈரோடு, பிப். 20: கொங்கு மண்டல பீடி தொழிலாளர் சங்கத்தின் (ஏஐடியுசி) நிர்வாகக்குழு கூட்டம் ஈரோட்டில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு சங்க துணை தலைவர் ஜிலானி தலைமை வகித்தார். சங்க பொதுச்செயலாளரும், ஏஐடியுசி மாநில செயலாளருமான சின்னசாமி தீர்மானங்களை விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 27ம் தேதி கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெறவுள்ள அரசியல் எழுச்சி மாநாட்டில் சங்கம் சார்பில் கலந்து கொள்ள வேண்டும்.வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு நிதியுதவி 2 ஆயிரம் ரூபாயை அனைத்து பீடி தொழிலாளர்ளுக்கும் வழங்க வேண்டும்., வருங்கால வைப்புநிதி திட்டத்தில் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ஆயிரம் ரூபாயில் இருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.சமூக பாதுகாப்பு சட்டங்களை தொகுத்து தேசிய அளவில் ஒரே சமூக பாதுகாப்பு வாரியமாக அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான முறையில் ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பீடி தொழிலாளர்களுக்கு ஆயிரம் பீடிகள் சுற்றுவதற்கு அடிப்படை சம்பளமாக 300 ரூபாய் வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கு தினமும் ஆயிரம் பீடிகள் சுற்றுவதற்கு தேவையான அளவு இலை, தூள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: