மேட்டூர் அரசு ஐடிஐ.,யில் சி.என்.சி ஆபரேட்டர், எம்.ஆர்.ஏசி பயிற்றுநர் தற்காலிக பணியிடங்கள்

சேலம், பிப். 20: மேட்டூர் அரசு தொழிற்பயிற்சி (ஐடிஐ) நிலையத்தில் பிபிபி திட்டத்தின் கீழ், சிஎன்சி ஆபரேட்டர் மற்றும் எம்ஆர்ஏசி பயிற்றுநர் பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேட்டூர் அரசு ஐடிஐ முதல்வர் லீமாரோஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ெதரிவித்திருப்பது:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கி வரும் மேட்டூர் அணை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிபிபி திட்டத்தின் கீழ் சிஎன்சி ேலத், விஎம்சி செட்டர் கம் ஆபரேட்டர் பணியிடத்திற்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்ப கல்வியாக ஐடிஐ, டிஎம்இ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2019 அன்று 35வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சிஎன்சி மெஷின் கையாளுவதில் 5 ஆண்டுகள் முன்அனுபவம் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ₹15ஆயிரம் வழங்கப்படும்.

இதேபோல் மேட்டூர் ஐடிஐயில் கடந்தாண்டு புதிதாக துவங்கப்பட்டுள்ள கம்மியர் குளிர்சாதனம் தட்பவெட்ப நிலை கட்டுப்படுத்துதல் பிரிவிற்கு ₹14000+6000=20,000 தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணிபுரிய முன்னுரிமை அற்றவர்கள், என்ற அடிப்படையில் பயிற்றுநர் நியமனம் செய்யப்பட உள்ளது. தொழிற்பிரிவில் தேர்ச்சி ெபற்ற என்டிசி, என்ஏசி சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் சிஐடிஎஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிப்போரின் வயது 1.7.2019 அன்று 35க்குள் இருக்கவேண்டும்.  மேற்காணும் தகுதியுடைய நபர்கள் பெயர், கல்வித்தகுதி, இனம் மற்றும் முகவரி, கைபேசி எண்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை வரும் மார்ச் 1ம்தேதி மாலை 5மணிக்குள் முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மேட்டூர் அணை 636452 என்ற முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுடைய நபர்களுக்கு நேர்முகத் ேதர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்படும்.  இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: