இடைப்பாடியில் சட்ட விழப்புணர்வு முகாம்

இடைப்பாடி, பிப்.20:  இடைப்பாடியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம், நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு  சேலம் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான மோகன்ராஜ் தலைமை வகித்தார். சங்ககிரி வட்ட சட்டப்பணிக்குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான ராஜேந்திர கண்ணன் வரவேற்றார். கலெக்டர் ரோகிணி, எஸ்பி தீபாகனிகர், சேலம் தலைமை குற்றவியல் நடுவர் சிவஞானம், மாவட்ட நீதிபதி குணவதி ஆகியோர் பேசினர்.

வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும், 4சக்கர வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர் செல்லப்பன், ஆனந்தன், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆணைக்குழு செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Related Stories: