×

தோகைமலை தளிஞ்சி மேலப்பட்டியில் தென்னை விவசாயிகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி

தோகைமலை, பிப். 20: தோகைமலை அருகே தளிஞ்சி மேலப்பட்டியில் தென்னை விவசாயிகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே தளிஞ்சி ஊராட்சி மேலப்பட்டியில் புழுதேரியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் தென்னை மரம் ஏறுதல் மற்றும் பூச்சி நோய் கட்டுப்படுத்துதல் குறித்து திறன் வளர்ப்பு பயிற்சி துவங்கியது. ஒரு மாதம் நடைபெறும் இப்பயிற்சியினை நபார்டு வங்கியின் துணை பொது மேலாளர் பரமேஸ்குமார் தலைமையேற்று துவக்கி வைத்தார். வேளாண் உதவி இயக்குனர் பாண்டி, வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சியின் விதிமுறைகள், தொழில்நுட்ப வகுப்புகள் மற்றும் பயிற்சியின் முடிவில் நடைபெற இருக்கும் தேர்வு, தென்னை மரம் ஏறும் கருவி குறித்து செயல்முறை விளக்கம் என்று பல்வேறு தலைப்புகளில்  விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் தமிழ்செல்வி, கவியரசு உள்பட 25 விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Tags : coconut farmers ,
× RELATED திருச்சிற்றம்பலம் உழவர்...