×

மேக் இன் இந்தியா தேவை இல்லை பை இன் இந்தியா தான் தேவை கரூர் விழாவில் தம்பிதுரை பேச்சு

கரூர், பிப். 20: நமது நாட்டுக்கு மேக் இன் இந்தியா தேவை இல்லை. பை இன் இந்தியா தான் தேவை என்று கரூரில் நடந்த விழாவில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.கரூரில் புதிய சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். விழாவில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியது:கரூர் தொகுதியில் 1989ல் எம்பியானேன். 1996ல் தோல்வி, மீண்டும் 1997ல் வெற்றிபெற்று மத்திய அமைச்சராக இருந்தபோது பஸ் நிலையமும், ரயில் நிலையமும் இணைப்பு சாலையில் இருக்க வேண்டும் என முயற்சி எடுத்தேன். 1999ல் கரூரில் போட்டியிடவில்லை. அதன் பின்னர் தொடர்ந்து இருமுறை எம்பியாக இருக்கிறேன்.திருச்சி- கோவை பசுமை வழிச்சாலை திட்டம் வர இருக்கிறது. இதில் கரூர்- கோவை சாலையானது 200 அடியில் அமையும். நான்கு சர்வீஸ் ரோட்டையும் சேர்த்து 12 டிராக் இருக்கும். கோவைக்கு 2 மணி நேரத்தில் சென்று விடலாம்.

வெங்கமேடு மேம்பாலம், பைபாஸ் சாலை ஆகியவை நான் கொண்டு வந்தது. ஆனால் கல்வெட்டில் என் பெயர் இருக்காது. பாஜகவை நான் தாக்கிபேசுகிறேன் என்கிறார்கள். டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை, பஸ்பாடிபோன்ற தொழில்கள் நலிவடைந்து வருவதைத்தான் பேசுகிறேன். மேக் இன் இந்தியா என்கிறார்கள். பை இன் இந்தியா தான் தேவை. நமது உற்பத்தி பொருட்களை வாங்காமல் இருந்தால் என்ன வளர்ச்சி. இதுதான்எனது நிலை.
என்ன செய்தார் எம்பி என்கிறார்கள். நான் சொல்லாததையெல்லாம் பட்டியல் போட்டு அவைகளை நான் செய்யவில்லை என பழி போடுகிறார்கள். நான் பொருளாதாரம் தான் படித்தேன். இனி புவியியலையும் படிக்கிறேன். டெல்லியில் போய் படுத்து கொள்கிறார் என்கிறார்கள். இது ஜனநாயக நாடு கேட்பதற்கு உரிமை இருக்கிறது. மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும் என்றார்.

Tags : India ,Pi ,Karur Festival ,Thambuthurai Talk ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!