×

கரூர் சிவசக்தி நகர் பகுதியில் சாக்கடை கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு அபாயம்

கரூர், பிப். 20: கரூர் நகராட்சிக்குட்பட்ட மில்கேட் அருகே சிவசக்தி நகரில் 5 தெருக்கள் உள்ளன. இதில் நான்காவது தெருவில் இரண்டு சிறிய தெருக்கள் சந்திக்கும் பகுதியில் சின்டெக்ஸ் டேங்க் உள்ளது. இந்த பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீரும், தெருக்களின் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் ஒரே இடத்தில் கடந்த பல ஆண்டுகளாக தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த பகுதியில் நிலவி வரும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திட வேண்டும் என பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பகுதி மக்களும் பலமுறை கோரிக்கை வைத்தும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படாமல் உள்ளது. இதன் காரணமாக கொசுக்களின் உற்பத்தி, துர்நாற்றம் போன்ற பல்வேறு தொல்லைகளால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கண்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : area ,Sivasakthi Nagar ,Karur ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...