மதுரை அரசு மருத்துவமனையில் குறைந்தது குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை

மதுரை, பிப்.20: மதுரை அரசு மருத்துவமனையில் மேற்ெகாள்ளப்படும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளை மேம்படுத்த வேண்டும் என மருத்துவ ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் செய்யப்படும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இரு பாலினத்திற்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை கடந்தாண்ேடாடு ஒப்பிடுகையில் இந்தாண்டு பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை எனக்கூறப்படுகிறது. போதுமான விழிப்புணர்வு, சிறந்த கவனிப்பு, உயர்த்தப்படாத உதவித்ெதாகை போன்ற காரணங்களே இதற்கு காரணங்களாக கூறப்படுகிறது.

மருத்துவ ஆர்வலர்கள் கூறுகையில், ``அரசு மருத்துவமனைகளில் மேற்ெகாள்ளப்படும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளை மேம்படுத்துவது தொடர்பாக சில மாதங்களுக்கு முன் அரசு மருத்துவமனையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மகப்பேறியல் துறை மற்றும் குடும்ப நலத்துறையினர் கலந்துகொண்டு, கடந்தாண்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள, அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளின் விபரங்கள், ஆண்களுக்கான அறுவை சிகிச்சைகள் மற்றும் பெண்களுக்கான அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கைகளை பதிவு செய்தனர். அரசு மருத்துவமனையில் செய்யப்படும் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகளின் தரத்தை மேம்படுத்த முடிவு செய்தனர். ஆனால் துறை அதிகாரிகள் அதில் தீவிரம் காட்டவில்லை.

இனியாவது, மகப்பேறு மருத்துவ கவுன்சிலர்களை கூடுதலாக நியமித்து, குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை குறித்து விழிப்புணர்வை அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும்’’ என்றனர். மேம்படுத்த மருத்துவ ஆர்வலர்கள் கோரிக்கை குளறுபடி உண்மை அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வறுமைக்கோடு கணக்கெடுப்பு, மதுரை மாவட்டத்தில் நகர் பகுதியில் 2003லும், ஊரக பகுதியில் 2013லும் கணக்கெடுக்கப்பட்டது. இதில் பல குளறுபடிகள் உள்ளது உண்மைதான். தற்போதுள்ள நிலையில், உண்மையான ஏழை குடும்பங்கள் அதிக அளவில் விடுபட்டுள்ளது. மாவட்டத்தில் புறநகர் பகுதியில் ஒரு லட்சம் குடும்பமும், நகர் பகுதியில் ஒரு லட்சமும் என சுமார் 2 லட்சம் பேர் இந்த நிதியை பெறலாம். விடுபட்ட மத்திய அரசின் அன்ன யோஜனா பயனாளிகள் மட்டும் சேர்க்கப்படுவார்கள்’ என்றார்.

Related Stories: