எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப்.20: பிஎஸ்என்எல். ஊழியர்களின் மூன்றுநாள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து எல்ஐசி ஊழியர்கள் ேநற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் உடனே வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் மூன்றுநாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக எல்ஐசி ஊழியர்களும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரைக் கோட்டத்தின் ஆறு மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து கிளை அலுவலகங்களிலும் இந்த ஆர்பாட்டம் நடந்தது. மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கதேவர் பெயர் சூட்ட கோரி

கலெக்டர் அலுவலகம் முற்றுகை: 186 பேர் கைது

மதுரை, பிப். 20: மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கதேவர் பெயரை சூட்டக்கோரி தமிழ்நாடு தேவர் பேரவையினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 186 பேரை போலீசார் கைது செய்தனர். தேவர் இனத்திற்கு 30 சதவீத தனி இடஒதுக்கீடு வேண்டும். கள்ளர், மறவர், அகமுடையார், வல்லம்பர், துளுவவேளாளர் ஆகிய உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவர் என அறிவித்து, அரசாணை வெளியிட வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வேண்டும். மருதுபாண்டியர் பெயரை திருச்சி விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தேவர் பேரவை சார்பில் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.

பேரவையின் மாநிலத்தலைவர் முத்தையா தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட 186 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: