கொடைக்கானல் ஜிஹெச்சில் மாடுகள் உலாவால் அச்சம் சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

கொடைக்கானல், பிப். 20: கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மாடுகள் உலா வந்து நோயாளிகள், பார்வையாளர்களை அச்சுறுத்தி வருகிறது. கொடைக்கானல் கவி தியாகராஜர் ரோட்டில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு வெளிநோயாளிகளாக தினமும் 300க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாக சுமார் 150 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதனால் அனைத்து நாட்களும் நோயாளிகள், பார்வையாளர்கள் என அரசு மருத்துவமனையே பரபரப்பாக இருக்கும். இவ்வளவு ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்குள் மாடுகளின் வருகையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாடுகள் குறுக்கும், நெறுக்குமாக சர்வசாதாரணமாக உலா வருகின்றன. சில சமயம் மாடுகள் ஓட்டம் பிடிப்பதால் நோயாளிகள், பார்வையாளர்கள் அங்குமிங்கும் சிதறி ஓட வேண்டியுள்ளது. இதனால் பலரும் கீழே விழுந்து காயமுறுகின்றனர்.

வீட்டு மாடுகள் தவிர காட்டெருமைகளும் அவ்வப்போது புகுந்து அச்சுறுத்தி வருகிறது. இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குள் மாடுகள் உலா வந்து அச்சுறுத்தி வருகிறது. சிலசமயம் அவர்கள் வைத்திருக்கும் உணவுப்பொருட்களை தின்று விடுகின்றன. இதனால் நோயாளிகள், பார்வையாளர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். எனவே மருத்துவமனையில் சுற்றுச்சுவர் அமைப்பதுடன் பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்க வேண்டும். மேலும் மாடுகளை திரிய விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: