ஒட்டன்சத்திரத்தில் கிராம வளர்ச்சி திட்ட பயிற்சி

ஒட்டன்சத்திரம், பிப். 20: ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் கிராம வளர்ச்சி திட்டம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஜாகீர்உசேன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மகுடபதி, மாவட்ட முதன்மை பயிற்றுனர்கள் சவரி, அண்ணைமலர், கிளாராமேரி ஆகியேர் பங்கேற்றனர். இதில் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 35 கிராம ஊராட்சியில் இருந்தும் தலா 6 திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கிராம வளர்ச்சி திட்டம் முறையாக செயல்படுத்த ஊராட்சி செயலர்கள், மக்களுக்கு தேவையான திட்டம் குறித்து கருத்து கேட்கப்பட வேண்டும். அத்திட்டத்தை கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும்.

பல்துறை அலுவலர்களை இணைத்து 18 துறைகள் மற்றும் 29 இனங்கள் வைத்து, கிராம வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளையும் தகவல் சேகரித்து, ஐந்தாண்டு திட்டம் தயாரித்து ஓராண்டு திட்டம் தீட்டி மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: