சென்னை மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர்கள் 44 பேர் பணியிடமாற்றம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் 44 துப்புரவு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும், என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சில நாட்களுக்கு முன்  சென்னை மாநகராட்சியின் சுகாதார துறையில் பணியாற்றி வந்த 59 சுகாதார ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் பல்வேறு குளறுபடி நடத்துள்ளதாக ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை துறையில் பணியாற்றிவரும் 44 துப்புரவு ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து துணை ஆணையர் (சுகாதாரம்) மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும் இடமாற்றம்  செய்யப்பட்டவர்கள் தற்போது பணியாற்றும் மண்டலங்களை தக்க வைக்க கோரும் கோரிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: