ஓடும் ரயிலில் பெண்ணிடம் 70 சவரன் கொள்ளை: மர்ம நபருக்கு வலை

சென்னை:  சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் விசால லட்சுமி (38). இவர், தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக கடந்த 2 நாட்களுக்கு முன் கோவில்பட்டிக்கு சென்றார். அங்கு, திருமணம்  முடிந்ததும் ேநற்று முன்தினம் இரவு கோவில்பட்டியில் இருந்து ெநல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.ரயில், நேற்று காலை சென்னை மாம்பலம் ரயில் நிலையம் அருகே வந்தபோது, விசால லட்சுமி இறங்குவதற்காக தனது உடமைகளை எடுத்து கொண்டிருந்தார். அப்போது, 70 சவரன் நகைகள் வைத்திருந்த பை மட்டும்  மாயமானது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விசால லட்சுமி செய்வது அறியாமல் தவித்தார்.இதையடுத்து விசால லட்சுமி மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்படி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, விசால லட்சுமி வந்த ரயில் பெட்டியில் பயணம் செய்த பயணிகள்  பட்டியலை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீசார் ரயிலில் பயணம்  செய்த ரயில்வே ஊழியர்களிடமும் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மாம்பலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு  ஏற்பட்டது.

மற்றொரு சம்பவம்:  திருமுல்லைவாயல், ஜாக் நகர், கக்கன்ஜி தெருவை சேர்ந்தவர் சேகர் (64), ஒப்பந்ததாரர். இவரது மனைவி நீலவேணி (58). கடந்த 12ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு சேகர், தனது மனைவியுடன் மலேசியா,  சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றார். பின்னர் நேற்று முன்தினம் இரவு  வீடு திரும்பினர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது. பீரோ  உடைக்கப்பட்டு, அதில் இருந்த 10 சவரன் நகைகள், ₹40 ஆயிரம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: