நசரத்பேட்டையில் நாளை நடக்கும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் வருகை: ஆவடி நாசர் அறிக்கை

திருவள்ளூர், பிப். 19: பூந்தமல்லி ஒன்றியம், நசரத்பேட்டையில் நாளை நடக்கும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் திரளாக கலந்து கொள்ள  வேண்டும் என சா.மு.நாசர் அறிக்கையில் கூறியுள்ளார்.திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவடி சா.மு.நாசர் அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி (தனி) சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் நாளை (20ம் தேதி) காலை 9  மணியளவில் பூந்தமல்லி ஒன்றியம், நசரத்பேட்டையில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். இக்கூட்டத்திற்கு ஒன்றிய, நகர செயலாளர்கள் பூவை எம்.ஜெயக்குமார், டி.தேசிங்கு, எம்.ரவிக்குமார், புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், ஆர்.ஜெயசீலன்,  தி.வே.முனுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி, மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன், மாநில மாணவர் அணி  இணைச் செயலாளர் பூவை சி.ஜெரால்டு, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், மாவட்ட நிர்வாகிகள் கே.திராவிடபக்தன், கே.ஜெ.ரமேஷ், கா.பார்த்தசாரதி, காயத்ரிதரன், மு.ராஜேந்திரன், மா.இராஜி,  ஜி.ஆர்.திருமலை, ஜெ.ஜெய்மதன், கே.யு.சிவசங்கரி ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.எனவே, வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி பணிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொண்டு  சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு ஆவடி சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.

× RELATED திமுக முன்னாள் மாவட்ட செயலாளர்...