புரட்சிபாரதம் கட்சி பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழா: பூவை.ஜெகன்மூர்த்தி பங்கேற்பு

ஆவடி, பிப்.19: புரட்சிபாரதம் கட்சி பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கட்சியின் தலைவர் பூவை. ஜெகன்மூர்த்தி, கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.  புரட்சி பாரதம் கட்சியின் துணை பொதுச்செயலாளரும், ஆவடி நகராட்சி, 8வது வார்டு முன்னாள் கவுன்சிலருமான முல்லை கே.பலராமன்- சகுந்தலா பலராமன் தம்பதியினரின் இளைய மகன் ப.அறிவழகன்- யோகேஸ்வரி  ஆகியோரது திருமண வரவேற்பு விழா நேற்று முன்தினம்  நடைபெற்றது. விழாவில் கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி- யமுனா ஜெகன்மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். முன்னதாக, மாநில துணை பொதுச்செயலாளர் பூங்காநகர் ப.காமராஜ் அனைவரையும்  வரவேற்றார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க.பாண்டியராஜன்,  ப.பெஞ்சமின், முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா, டாக்டர் வேணுகோபால் எம்பி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுனியம் பலராமன் எம்எல்ஏ, திருவள்ளூர்  தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் தெற்கு மாவட்ட தமாகா தலைவர்  விக்டரிமோகன், பாமக  துணை பொதுச்செயலாளர் அம்பத்தூர் கே.என்.சேகர்,

மதிமுக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், தமாகா மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.கே.மனோகரன், பல்வேறு கட்சிகளின் நகர செயலாளர்கள்  ஜி.ராஜேந்திரன், ஆர்.சி.தீனதயாளன், ஜோசப்சாமுவேல்,  அமீத்பாபு மற்றும் கலை.சேகர், சண்.பிரகாஷ், துரைராஜ், இணையத்துல்லா, தங்க.குணசேகரன், எம்.ஆர்.ஜானகிராமன், தொழிலதிபர்கள் டி.வி.கல்யாணசுந்தரம், பி.ஜெயராமன், டி.எஸ்.சதீஷ்பாபு, பேராசிரியர் கனகராஜ் ஆகியோர்  வாழ்த்தினர். மேலும், புரட்சிபாரதம் கட்சியின் மாநில நிர்வாகிகள் பூவை. முகிலன், மணவூர் மகா, ருசேந்திரகுமார், பூவை.சரவணன், பழஞ்சூர் வின்சென்ட், சி.பி.குமார், பிரிஸ் பன்னீர், சீனிவாசன், ஆம்ஸ்ட்ராங், ஜான்சன், எட்மண்ட், பரணி மாரி,  ஆர்.எம்.எஸ். ஜான்,  வழக்கறிஞர்கள் அமல்ராஜ், சைமான் பாபு, மகா, விருதுநகர் லூர்துராஜ், நாமக்கல் இளவழுதி, சேலம் சுந்தர், ஒரகடம் மதன், கண்ணன் ஆவடி நகர நிர்வாகிகள் முல்லை குமார், முல்லை ராஜசேகர், புரட்சி சீனு,  முல்லை நந்தா, மூர்த்திநகர் மணிமாறன், வக்கீல் தமிழ்வேந்தன், வெங்கடேசன், மனோஜ், முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வழக்கறிஞர் முல்லை பாலாஜி நன்றி கூறினார்.

× RELATED ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது...