×

நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள் குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி

திருவள்ளூர், பிப். 19: நாடாளுமன்ற தேர்தல் விதிமுறை மற்றும் மின்னணு வாக்கு இயந்திரம், விவிபிஏடி இயந்திரங்களை இயக்குவது குறித்து மாநில அளவில் பயிற்சி பெற்ற அலுவலர்கள் மூலம் மண்டல அலுவலர்களுக்கு  பயிற்சி வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தலின்பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் து.சந்திரன் தலைமை வகித்தார்.திருவள்ளுர் மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட மண்டல அலுவலர்கள் 118 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் தேர்தல் துணை வட்டாட்சியர்கள், மண்டல துணை  வட்டாட்சியர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள்,  துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மண்டல அலுவலர்களுக்கு மாநில அளவில் பயிற்சி பெற்ற இரண்டு அலுவலர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது. தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் மின்னணு  வாக்கு இயந்திரம், விவிபிஏடி இயந்திரங்களை இயக்குவது குறித்து விரிவாக பயிற்சி வழங்கப்பட்டது.இவர்களின் மூலம் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள்  கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்