திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 45 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

திருவள்ளூர், பிப். 19: திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில், 45 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., தேன்மொழி உத்தரவிட்டுள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசு துறைகளில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வருபவர்களை, பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகம்  முழுவதும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரே நாளில், 45 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிடம் மாற்றம் செய்து, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., தேன்மொழி உத்தரவிட்டுள்ளார். மாறுதல் செய்யப்பட்டு உள்ளவர்கள் அந்தந்த  இடங்களில் விரைவில் சென்று பொறுப்பேற்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

× RELATED பெண் இன்ஸ்பெக்டர்களுக்கு வாகனம்...