×

எல்லாபுரம் வடக்கு ஒன்றியத்தில் ரேஷன் கடையில் முறைகேடு; திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் புகார்

ஊத்துக்கோட்டை, பிப். 19:  எல்லாபுரம்  வடக்கு ஒன்றியத்தில், ‘ரேஷன் கடையில் முறைகோடு நடக்கிறது. மேலும், பொதுமக்கள் கடையில் பொருட்கள் கேட்கும்போது எல்லாம் பொருட்கள் இல்லை என்ற பதிலே கடைக்காரரின்  வார்த்தை இருக்கிறது’ என்று திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் வடக்கு  ஒன்றியத்தில்  உள்ள காக்கவாக்கம், தொளவேடு  ஆகிய 2 ஊராட்சிகளில்  திமுக ஊராட்சி  சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில், வடக்கு ஒன்றிய செயலாளர் பி.ஜெ.மூர்த்தி   தலைமை தாங்கினார்.

பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், அவைத்தலைவர் ரவிச்சந்திரன்,  வக்கீல்கள் சீனிவாசன், முனுசாமி, கேவி.லோகேஷ், செஞ்சிவேல்,  சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர்கள் டில்லிசங்கர், கூட்டுறவு சங்க  தலைவர் அபர்ணா ராஜூ வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக  மாநில சட்டத்துறை செயலாளர் கிரிராஜன்   கலந்துகொண்டார் .இந்த ஊராட்சி சபை கூட்டங்களில்  காக்கவாக்கம்  மக்கள்   கூறும்போது, ‘ரேஷன் கடைகளில் முறைகேடு நடக்கிறது. பொருட்கள் இல்லை என கடை  ஊழியர்கள் கூறுகிறார்கள், கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை, முதியோர்  உதவித்தொகை பல மாதங்களாக வருவதில்லை’ என்றனர்.

தொளவேடு ஊராட்சியில் மக்கள் கூறுகையில், ‘நூறு நாள் வேலையில் 2 நாள் மட்டுமே வேலை தருகிறார்கள் 10 நாள் விடுமுறை விடுகிறார்கள்,  தொளவேட்டிற்கு திமுக ஆட்சியில் விடப்பட்ட மினி பஸ் தற்போது  இயக்கப்படுவதில்லை’ என சராமாரி புகார் கூறினர்.
கிரிராஜன் கூறும்போது, ‘100 நாள் வேலை, 150 நாட்களாக அதிகரிக்கப்படும், காக்கவாக்கம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை கொண்டு வரப்படும், மேலும், ரேஷன் பொருட்கள் கிடைக்க தக்க நடவடிக்கை  மேற்கொள்ளப்படும். திமுக ஆட்சிக்கு வந்ததும் தொளவேட்டிற்கு மினி பஸ் இயக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : union ,Allapuram ,meeting ,DMK Council ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு...