பைக் மீது மினி வேன் மோதி 3 வயது குழந்தை உள்பட 2 பேர் பலி

பெரும்புதூர், பிப்.19: வந்தவாசியை சேர்ந்தவர் குப்புசாமி (45). இவரது மனைவி லட்சுமி (37). இவர்களது பேரன் பரசுராமன் (3). திருவள்ளூர் அருகே உள்ள கவரப்பேட்டையில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு குப்புசாமி,  லட்சுமி ஆகியோர் பேரன் பரசுராமனுடன் பைக்கில் புறப்பட்டனர்.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை  வடமங்கலம் கூட்டு சாலையில் சென்றபோது, விதிமுறைக்கு மாறாக எதிர் திசையில் வந்த மினி வேன்,  பைக் மீது மோதியது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.
இதை பார்த்த பொதுமக்கள், படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு, 108ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  குப்புசாமி, குழந்தை பரசுராமன் ஆகியோர் இறந்தனர்.  லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாின்படி பெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி மினி வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

× RELATED சொகுசு கார்கள்... விலை உயர்ந்த பங்களா...