கிரிக்கெட் விளையாடும்போது கல்லூரி மாணவன் சாவு

கூடுவாஞ்சேரி, பிப். 19: மறைமலை நகரை அருகே கீழ்கரணை கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் சீனிவாசன் (எ) ராமச்சந்திரன் (21). கல்லூரி மாணவன் நேற்று மாலை, ஆதனூர் ஏரியில் கிரிக்கெட் போட்டி நடந்தது. அதில் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது, அவர் மார்பில், பந்து வேகமாக விழுந்தது. இதில், அவர் சுருண்டு விழுந்தார்.உடனேஅங்கிருந்தவர்கள், அசீனிவாசனை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை, பரிசோதனை செய்த டாக்டர்கள், சீனிவாசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.புகாரின்படி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

× RELATED நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு