திமுக எம்எல்ஏவின் தாய் காலமானார்: முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி

செய்யூர், பிப். 19: செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசுவின் தாய் நேற்று அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசு. திமுக மருத்துவர் அணி துணை அமைப்பாளராகவும் செயலாற்றுகிறார். இவரது தந்தை தண்டியான் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது தாய்  அஞ்சாலை (84), செய்யூர் கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி அஞ்சாலை காலமானார். இதை அறிந்ததும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள், தொண்டர்கள் அங்கு சென்று, அஞ்சாலையின் உடலுக்கு  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இரங்கல் நிகழ்ச்சியில்,  மாவட்ட செயலாளர் க.சுந்தர், தென்  சென்னை மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், எம்எல்ஏக்கள் அரவிந்த்  ரமேஷ்,  ரவிச்சந்திரன், சிவா புகழேந்தி, எழிலரசன்,  ஒன்றிய செயலாளர்கள்  ஸ்ரீதரன், ஏழுமலை, ராமச்சந்திரன், சரவணன், செல்வம், குமார்,  தம்பு, சத்தியசாய், குமணன், பேரூராட்சி செயலர் இனியரசு, மாவட்ட துணை  செயலாளர்கள் தசரதன், வெளிக்காடு ஏழுமலை, மதுராந்தகம்  முன்னாள் நகர மன்ற  தலைவர் குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வெடால் ராமலிங்கம், ஜனனி,  நித்தியானந்தம்  உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் ஆர்.டி.அரசுக்கு ஆறுதல் கூறினர்.பின்னர் இறந்த அவரது உடல் இரும்பேடு பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக கொண்டு சென்று அங்குள்ள இடுகாடு பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

× RELATED அதிமுக முன்னாள் எம்.பி. ராஜாபரமசிவம் காலமானார்