திருக்கழுக்குன்றம் அருகே இலவச ஆடுகள் வழங்கும் விழா

திருக்கழுக்குன்றம், பிப்.19: திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நல்லாத்தூர் ஊராட்சியில் அரசின் இலவச ஆடுகள் வழங்கும்  விழா நடந்தது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ருக்குபெருமாள் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப் பாளர்களாக மத்திய மாவட்ட அதிமுக செயலாளர்   எஸ்.ஆறுமுகம், மரகதம்குமரவேல் எம்பி ஆகியோர் கலந்து கொண்டு 45 பேருக்கு இலவச ஆடுகளை வழங்கினர். மத்திய மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம், முன்னாள் எம்எல்ஏ. ராஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED களக்காடு அருகே 15 ஆடுகள் மாயம்