×

விவசாயிகளுக்கான அறிவியல் விழிப்புணர்வு

காஞ்சிபுரம், பிப்.19: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் மற்றும் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து கிராமப்புற விவசாயிகளுக்கான அறிவியல், அறிவாற்றல் விழிப்புணர்வு நிகழ்ச்சி சங்கரா கலை மற்றும்  அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வேளாண் இணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி கலந்து கொண்டு மண்வளம் பராமரிப்பு, பாதுகாப்பு குறித்து பேசினார்.காஞ்சிபுரம் மாவட்ட  நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்ட வேளாண் துணை இயக்குனர் சாந்தி  கலந்துகொண்டு பேசுகையில், நுண்ணீர் பாசனம் அமைத்த விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பம்ப் செட்டுகள், பைப் லைன்கள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் வழங்கப்படுவது பற்றி கூறினார்.
தெகூடதஇ பண்ணை உற்பத்தி திட்டத்தின் கீழ்  ஆயில் இன்ஜின், மண்வெட்டி, கடப்பாரை, பாண்டு ஆகிய   கருவிகளை  80% மானியத்தில் வழங்கப்படும் என்றார்.

திண்டுக்கல் வேளாண் பொறியாளர் பிரிட்டோ ராஜ் பேசும்போது, கோடைக்காலத்தில் நீர் மேலாண்மை மற்றும் இயற்கை விவசாயத் தொழில் நுட்பங்கள், நிலத்தடி நீரை பாதுகாகக்க வேண்டியதன் அவசியம், மண் வரப்பு  அமைத்தல், குழி எடுத்து வரப்பு அமைத்தல், மானாவாரி நிலங்களில் வரப்பு அமைத்தல், தோப்பில் குழி எடுத்து வரப்பு அனமத்தல், பண்ணை குட்டை அனமத்தல், நீர்தகங்களின் அனமப்பு, உறை கிணறு அமைத்தல், கிணறுகளில்  பக்கச் சுவர் அமைத்தல் உள்ளிட்டவை குறித்து பேசினார்.
தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட மரம் வளர்ப்போர் சங்கத் தலைவர் மாசிலாமணி,  மரங்களும் மனிதர்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இறுதியில் விழா ஒருங்கிணைப்பாளர் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் துறைத்  தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags :
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...