தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்

தாம்பரம், பிப். 19: மேற்கு தாம்பரத்தில், நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.மேற்கு தாம்பரம், காந்தி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு  நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.  கடந்த  2018 டிசம்பர் மாதத்தில் 3 கட்டங்களாக இப்பயிற்சி முகாம் நடந்தது.
அதைதொடர்ந்து 4வது கட்ட பயிற்சி முகாமை நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி துவங்கி வைத்தார். அனகாபுத்தூர், செம்பாக்கம், பம்மல், பல்லாவரம், தாம்பரம் ஆகிய நகராட்சிகளின் துப்புரவு பணியாளர்கள் ஏராளமானோர்  இதில் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு பயிற்சி முகாமிலும் 60 துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  இதுவரையில் 480 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டம், பசுமை உரக்குடில், மக்கும், மக்காத குப்பையினை  கையாளும் முறைகள் தன்சுத்தம், பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட் அருள்ராஜ் ஆகியோர் விளக்களித்தனர்.பயிற்சியில் கலந்து கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு டிராவல்ஸ் பேக், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் சார்பில் பரிசாக வழங்கப்பட்டது.

× RELATED பழங்குடியின குழந்தைகளுக்கு கோடை பயிற்சி முகாம்