தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம்

காஞ்சிபுரம், பிப்.19: காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.  காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்  பவானி  வரவேற்றார்.இதில், 1330 திருக்குறள்களை முற்றோதல் செய்து முதல்வரிடம் இருந்து ₹10 ஆயிரம் பரிசு பெற்ற 32 மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில்  சிறந்து விளங்கிய இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்துக்கு கேடயம், பராட்டு சான்றிதழ், சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய பணியாளர்களுக்குப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

வணிகவரி உதவி ஆணையர் அம்பாசங்கர், காஞ்சிபுரம் மாவட்ட வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் ராமகிருஷ்ணன், பேராசிரியர் லலிதா சுந்தரம், முனீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்கள் சந்தானலட்சுமி, அன்பரசி, சத்தியபிரியா ஆகிய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அன்புச்செழியன் தமிழறிஞர் வெற்றியழகன், சம்பத்குமார் ஆகியோர் மொழிப்பயிற்சி அளித்தனர்.இந்த பயிலரங்கில்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் பல்வேறு துறைகளில் இருந்து 120க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

× RELATED மாலையணிவித்து மரியாதை பழநியில்...