லாட்ஜ் வரவேற்பு அறையில் பெண் உடை மாற்றும் காட்சி டி.வி.யில் ஓடியதால் பரபரப்பு: உறவினர் கடும் அதிர்ச்சி...ஊழியர்களுடன் அடிதடி

சென்னை: கேரளாவை சேர்ந்தவர் சுரேஷ் (38). இவர், உறவினர் இல்ல திருமணத்திற்காக தனது குடும்ப உறுப்பினர்கள் 46 பேருடன் நேற்று முன்தினம் ரயில் மூலம் சென்னை வந்தார். பின்னர் சென்ட்ரல் ரயில் நிலையம்  அருகே தனியார் விடுதியில் 46 பேருடன் அறை எடுத்து தங்கி இருந்தார்.அப்போது, விடுதியின் வரவேற்பு அறையில் சுரேஷ் அமர்ந்திருந்த போது, அங்குள்ள பெரிய டி.வி.யில் விடுதியின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் பதிவு ஓடிக் கொண்டிருந்தது. அதில் ஒரு கேமரா பதிவில் தனது  உறவினர் பெண் ஒருவர், அறையில் உடைமாற்றும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. இதை பார்த்த சுரேஷ் அதிர்ச்சியடைந்தார். உடனே விடுதி வரவேற்பு அறையில் இருந்த ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் சுரேஷ்  சம்பவம் குறித்து ஆதாரங்களுடன் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில், பெண் உடை மாற்றும் போது அறையின் முன் கதவு மூடப்படவில்லை. இதனால்  அறைக்கு வெளியே உள்ள சிசிடிவி கேமராவில் அறைக்குள் உடை மாற்றும் காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர், இதுதொடர்பாக வழக்கு பதிந்து, லாட்ஜ் ஊழியர்கள் விஜயகுமார் (28), முஸ்தபா ரகுமான் (27), இஸ்மாயில் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

× RELATED இளம்பெண் மர்மச்சாவு