கார் மோதி பள்ளி மாணவன் பலி

சென்னை: குரோம்பேட்டை, லட்சுமிபுரம், மேட்டு தெருவை சேர்ந்த மணிகண்டன் (11).,  குரோம்பேட்டை அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். இச்சிறுவன்  கடைகளில் பேப்பர் போடுவதற்காக சைக்கிளில்  குரோம்பேட்டை அருகே நேற்று  அதிகாலை சாலையை கடந்தபோது, கார் மோதி இறந்தான்.
* அடையாறு, பெசன்ட் அவென்யு சாலையில் நேற்று காலை  சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் சடலமாக கிடந்தார். போலீசார், சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும்  வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் என விசாரிக்கின்றனர்.

× RELATED கார் மோதி முதியவர் பலி