மயக்க மருந்து கொடுத்து பெண் பலாத்காரம்: வட மாநில ஆசாமியிடம் விசாரணை

வேளச்சேரி: பெசன்ட் நகர் செல்வ விநாயகர் அவென்யூ எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் யுவஸ்ரீ  (31). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பொறியியல் பட்டதாரி. இவர், கடந்த 2017ல் மலையேறும் பயிற்சிக்காக,  யுவ ஊட்டி சென்றார். அங்கு உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் பட்டாச்சாரியா (51) என்பவரும் பயிற்சிபெற வந்துள்ளார். அவருடன், யுவக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், கடந்த டிசம்பர் 2017ல் இருவரும் ரிஷிகேஷ் பகுதிக்கு மலையேறும் பயிற்சிக்காக சென்றுள்ளனர். அப்போது, சஞ்சய் பட்டாச்சாரியா உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, யுவயை பாலியல் பலாத்காரம்  செய்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் பட்டாச்சாரியாவிடம் கேட்டபோது, தனக்கும், தனது மனைவிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அதனால், தாங்கள் பிரிந்து வாழ்வதாகவும். மனைவியை விவாகரத்து செய்த பிறகு  திருமணம் செய்து  கொள்வதாகவும் கூறி சமாளித்துள்ளார்.

இதையடுத்து, சமாதானம் அடைந்து இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2018 டிசம்பர் மாதம் யுவக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து சஞ்சய் பட்டாச்சாரியா வீட்டுக்கும் சரியாக  வருவதில்லை. மேலும், அவரது மனைவி மாதவி மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஆகிய 3 பேரும் வந்து அடிக்கடி  துன்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக யுவ சாஸ்திரி நகர்  காவல் நிலையத்தில் புகார்  கொடுத்துள்ளார். சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து  சஞ்சய் பட்டாச்சாரியா மற்றும் இவரது மனைவி மாதவி அடையாளம் தெரியாத நபர்  3 பேரையும் காவல் நிலையம் அழைத்து விசாரித்து  வருகின்றனர்.

× RELATED மயக்க ஊசி செலுத்தி யானைகளை பிடிக்க வனத்துறையினருக்கு பயிற்சி