எர்ணாவூர் நாராயணன் இல்ல திருமண விழா: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திருவொற்றியூர்: சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் - லதா நாராயணன் ஆகியோரின் மகள் என்.உஷா, தூத்துக்குடி மாவட்டம் நளினிசேகர் மகன் எஸ்.குமரன் ஆகியோரது திருமணம் நேற்று  காலை, பூந்தமல்லி வானகரம் வாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு,  பொன்முடி, மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், காங்கிரஸ் மூத்த  தலைவர் குமரி அனந்தன், மக்கள் தேசிய கட்சி சோம. நாராயணன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, சமத்துவ மக்கள் கழக கிருஷ்ணகிரி  மாவட்ட நிர்வாகிகள் கே.கணேசன், கே.பாக்யராஜ், எர்ணாவூர் வியாபாரிகள் பொதுநல சங்க நிர்வாகிகள் தனசேகர், ஆறுமுகம், முத்துசாமி மற்றும் சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள், மகளிர் அணி, தொண்டர்கள், அரசியல் கட்சி  தலைவர்கள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், சமுதாய பெரியவர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள், உறவினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு வருகை தந்தவர்களை கார்த்திக் நாராயணன், சுகன்யா கார்த்திக், பாப்பாத்தி வருண்குமார், சகிலா கே.எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் வரவேற்றனர்.

× RELATED பலியானவர் குடும்பங்களுக்கு இழப்பீடு...