சென்னை முழுவதும் 81 இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்: கமிஷனர் உத்தரவு

சென்னை: சென்னை முழுவதும் 81 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சைதாப்பேட்டை சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்த விஜயகுமார் மத்திய குற்றப்பிரிவுக்கும், சூளைமேடு குற்றப்பிரிவில் பணிபுரிந்த ராஜேஷ்பாபு முத்தையால்பேட்டை சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், கே.கே.நகர் சட்டம் ஒழுங்கில்  பணிபுரிந்த பாலமுரளி திருநின்றவூர் குற்றப்பிரிவுக்கும், வடபழனி சட்டம் ஒழுங்கில் பணிபுரிந்த சந்துரு தாம்பரம் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், மத்திய குற்றப்பிரிவில் பணிபுரிந்த சீனிவாசன் வேலுசாமி கே.கே.நகர் சட்டம் ஒழுங்கு  பிரிவுக்கும், மத்திய குற்றப்பிரிவில் பணிபுரிந்த ஜெயபாரதி வேப்பேரி சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், செம்மஞ்சேரி சட்டம் ஒழுங்கில் பணிபுரிந்த சுந்தர் அசோக் நகர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், வேப்பேரி சட்டம் ஒழுங்கில்  பணிபுரிந்த வீரகுமார் குரோம்பேட்டை குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயசித்ரா எழும்பூர் குற்றப்பிரிவுக்கும், விபச்சார தடுப்பு பிரிவில் இருந்த மகாலட்சுமி திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல்  நிலையத்திற்கும், மத்திய குற்றப்பிரிவில் இருந்த தனலட்சுமி அயனாவரம் குற்றப்பிரிவுக்கும் என சென்னை மாநகரம் முழுவதும் 81 இன்ஸ்பெக்டர்களை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

× RELATED சர்ச்சைக்குரிய கொல்கத்தா மாஜி...