செல்போன் தயாரிப்பு நிறுவன அதிகாரி தூக்கிட்டு தற்கொலை

சென்னை: மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால் விரக்தியடைந்த செல்போன் தயாரிப்பு நிறுவன அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை சூளைமேடு அவ்வைபுரம் நேரு தெருவை சேர்ந்தவர்  பாலாஜி (36). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் உள்ள செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிந்து தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 6  வயதில் ஸ்ரீநிஷ் என்ற மகன் உள்ளான்.கடந்த சில நாட்களாக பாலாஜி மற்றும் அவரது மனைவி பிந்துவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பிந்து கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கடந்த ஒரு  வாரமாக பாலாஜி கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பெற்றோர் வீட்டில் இருந்து வெளியே சென்றபோது, தனிமையில் இருந்த பாலாஜி தனது அறையில் மின் விசிறியில் தனது மனைவி புடைவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  வெளியே சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.உடனே இதுகுறித்து சூளைமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்  சம்பவம் குறித்து வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

× RELATED நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் மக்கள் நலத்திட்ட பணிகள் முடக்கம்