அரியலூர் அருகே மின் கம்பியில் இயந்திரம் உரசியதால் ஒருவர் பலி

அரியலூர்,பிப்.15: அரியலூர் அருகே கதிரடிக்கும் இயந்திரம் மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம், கரைவெட்டி கிராமத்தை சேர்ந்த முத்தையா,சுதாகர் ஆகியோரின்  நெல் வயலில் அறுவடை செய்வதற்காக  திருச்சி மாவட்டம், நாகநல்லூரை சேர்ந்த  மோகன் கரைவெட்டிக்கு வந்துள்ளார். இந்நிலையில் நெல் அறுவடை இயந்திரத்தை  மோகன் ஓட்டிச் செல்லும்போது எதிர்பாராத விதமாக  உயர் அழுத்த  கம்பியில் இயந்திரம் உரசியதில் மின்சாரம் தாக்கி  மோகன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

× RELATED வாலிபர் மயங்கி விழுந்து சாவு