விளாங்குடியில் தொழில்முறை வழிகாட்டி கண்காட்சி, கருத்தரங்கு

அரியலூர், பிப். 15:  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர்  மற்றும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி சார்பில் 2018-19ம் ஆண்டிற்கான தொழில்முறை வழிகாட்டி கண்காட்சி மற்றும் கருத்தரங்கு   விளாங்குடியில் நடந்தது. கண்காட்சி, கருத்தரங்ைக துவக்கி வைத்து அரியலூர் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி புல முதல்வர்  சுப்பிரமணியன்   துவக்கி வைத்தார். பின்னர் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். விளாங்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி பேராசிரியர் சுரேஷ்குமார் பேசினார்.
போட்டி தேர்வுகள் குறித்து  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) மணிவேல் எடுத்துரைத்தார். ராணுவத்தில் வேலைவாய்ப்பு குறித்து மாணவர்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  அரியலூர் முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குனர் குணசேகரன் எடுத்துரைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சலுகை மற்றும் தனியார்துறை வேலைவாய்ப்பு குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்   அண்ணாதுரை   சிறப்புரையாற்றினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை அலுவலர்  வினோத்குமார்   நன்றி கூறினார். 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.


ஜெயங்கொண்டம் துணை மின்நிலைய பகுதிகள்:   ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், உட்கோட்டை, பிச்சனூர், குருவாலப்பர்கோவில், சிலால், பிலிச்சிகுழி, கங்கைகொண்டசோழபுரம், இலையூர், வாரியங்காவல், செங்குந்தபுரம், புதுக்குடி, சூரியமணல், தேவனூர், புதுச்சாவடி, சோழங்குரிச்சி
தா.பழுர் துணைமின் நிலைய பகுதிகள்:  பழுர், அனைகுடம், கோடங்குடி, சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், காடுவெட்டாங்குரிச்சி, இடங்கண்ணி, அண்ணகாரன்பேட்டை, கோடங்குடி, ஸ்ரீபுரந்தான், முட்டுவாஞ்சேரி, அறங்கோட்டை, பொற்பதிந்தநல்லூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், காரைகுரிச்சி, அருள்மொழி, இருகையூர், வாழைக்குரிச்சி, சிங்கராயபுரம்.
உடையார்பாளையம் துணை மின்நிலைய பகுதிகள்: உடையார்பாளையம், தத்தனூர், பொட்டக்கொல்லை, துளாரங்குரிச்சி, பரணம், இரும்புலிகுரிச்சி, த.மேலூர், இடையார்.
அரியலூர் துணை மின் நிலைய பகுதிகள்: அரியலூர் ஒரு சில பகுதி, கயர்லாபாத், வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், வாரணவாசி, அஸ்தினாபுரம், குறிச்சி நத்தம், புதுப்பாளையம், சிறுவளுர், ஜெமீன் ஆத்தூர், ரசுலாபாத், பாளம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி, ரரிவ்நகர், கொளப்பாடி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், ஒட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி.

× RELATED நடுவர்களுக்கான கருத்தரங்கம்