செந்துறை வடக்கு ஒன்றியத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

அரியலூர், பிப்.15: அரியலூர் மாவட்டம் செந்துறை வடக்கு ஒன்றியம் துளார், அசாவீரன்குடிக்காடு, தளவாய், மனக்குடையான், ஆதனக்குறிச்சி, ஆலத்தியூர் ஊராட்சிகளில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது.
 கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை வகித்து, மக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட அரசு உதவி தொகை மற்றும் அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் சரிவர கிடைப்பதில்லை. மேலும் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த சிவசங்கர், கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கண்டிப்பாக நிறைவேற்றி தரப்படும் என்றார்.
 இதில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி மற்றும் சிவபிரகாசம், பிஆர் பாண்டியன், விஸ்வநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

× RELATED திமுக பூத் கமிட்டியை எ.வ.வேலு ஆய்வு